தமிழக செய்திகள்

இனிவரும் காலம் இளைஞர்களுக்கான காலம்- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்க அடிக்கல்!நம் திராவிட மாடல் வானத்தை நோக்கிப் போடும் ஏணி இது.

மாலை மலர்

இனிவரும் காலம், அறிவால் உலகை வெல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான காலம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்க அடிக்கல்!

உயர்கல்வி, R&D, தொழில்நுட்பம், தொழில்முனைவு ஆகியவை ஒருங்கிணையும் நிலப்பரப்பாக TamilNaduKnowledgeCity அமையும். நம் DravidianModel வானத்தை நோக்கிப் போடும் ஏணி இது!

மேலும், @Cambridge_Uni, IIT-M, மெல்பர்ன் பல்கலைக்கழகம்,

@Adobe முதலியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் & விருப்பக் கடிதங்களும் இந்தியா சர்வதேசக் கல்வி மாநாட்டில் கையெழுத்தாகின.

இனி வரும் காலம், அறிவால் உலகை வெல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான காலம்!

வெல்வோம் ஒன்றாக!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

#IndiaGlobalEducationSummit: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் #தமிழ்நாடு_அறிவுசார்_நகரம் அமைக்க அடிக்கல்!உயர்கல்வி, R&D, தொழில்நுட்பம், தொழில்முனைவு ஆகியவை ஒருங்கிணையும் நிலப்பரப்பாக #TamilNaduKnowledgeCity அமையும். நம் #DravidianModel வானத்தை நோக்கிப் போடும் ஏணி இது!… pic.twitter.com/Casv6cs1I4