தமிழக செய்திகள்

கடல் மாநாடு நடத்த கடலுக்குள் சென்று சீமான் ஆய்வு

‘மரங்களின் மாநாடு’, அதனை தொடர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி தருமபுரியில் ‘மலைகளின் மாநாடு’ஆகியவற்றை நடத்தினார். தஞ்சையில் தண்ணீர் மாநாட்டை நடத்தப்போவதாக சீமான் தெரிவித்து இருந்தார்.

மாலை மலர்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி திருத்தணி அருகே 'மரங்களின் மாநாடு', அதனை தொடர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி தருமபுரியில் 'மலைகளின் மாநாடு'ஆகியவற்றை நடத்தினார்.

இதனை தொடர்ந்து, தூத்துக்குடியில் கடல் மாநாடு, தஞ்சையில் தண்ணீர் மாநாட்டை நடத்தப்போவதாக சீமான் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகர் மீனவ கிராமத்திற்கு சீமான் சென்றிருந்தார். அங்கு மீனவர்களுடன் கலந்துரையாடிய அவர், கடல் மாநாடு நடத்த மீனவர்களோடு கடலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார்.