தமிழக செய்திகள்

குடியரசு தின விழா- சிறப்பாக நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி

விழுப்புரம் தாலுகா சட்டம்-ஒழுங்கு தலைமைக் காவலர் கி.மகாமார்க்ஸுக்கு காந்தியடிகள் காவல் பதக்கம் வழங்கப்பட்டது.தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம், அசாம் பர்தோய் சிகாலா நடன நிகழ்ச்சி, ஜம்மு காஷ்மீர் ரௌஃப் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை மலர்

சென்னை:

நம் நாட்டின் 76-வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்றது.

காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து கவர்னர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தினார். குடியரசு தின விழாவில் பங்கேற்க வருகை புரிந்த கவர்னர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து அளித்து, கைக்குலுக்கி வரவேற்பு அளித்தார்.

தேசிய கீதம் இசைக்க கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ஹெலிகாப்டரில் மலர்கள் தூவப்பட்டது. இதையடுத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.

முன்னாள் ராணுவ வீரர்களின் படைப்பிரிவு, தமிழக காவல்துறை, சிஆர்பிஎஃப் படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த அமீர் ஹம்சாவுக்கு மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அமீர் ஹம்சாவுக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழுப்புரம் தாலுகா சட்டம்-ஒழுங்கு தலைமைக் காவலர் கி.மகாமார்க்ஸுக்கு காந்தியடிகள் காவல் பதக்கம் வழங்கப்பட்டது.

துறையூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமைக் காவலர் க.கார்த்திக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.

சேலம் ஆயுதப்படை 2-ம் நிலைக் காவலர் கா.சிவாவுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது. சேலம் ஆயுதப்படை 2-ம் நிலைக் காவலர் ப.பூமாலைக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.

இதையடுத்து குடியரசு தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இதை விழாவில் பங்கேற்று இருந்தவர்கள் கண்டு ரசித்தனர்.

தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம், அசாம் பர்தோய் சிகாலா நடன நிகழ்ச்சி, ஜம்மு காஷ்மீர் ரௌஃப் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், உயர்நீதிமன்ற நீதிபதி, கடற்படை அதிகாரி, தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி, கிழக்கு கடலோர காவல்படை கமாண்டர், தமிழக காவல்துறை தலைவர், காவல் கூடுதல் தலைமை இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.