தமிழக செய்திகள்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மாலை மலர்

சென்னை:

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மழை அதிகளவு பெய்த மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையில், மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடனும் ஆலோசனை நடைபெற்றது.