தமிழக செய்திகள்

'டபுள் என்ஜின்' மாநிலங்களில் இப்படி ஒரு வளர்ச்சியை காட்ட முடியுமா? - மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் திட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை வரை பாராட்டி உள்ளது.எல்லோருக்குமான வளர்ச்சியை நோக்கமாக கொண்டு திட்டங்களை தீட்டி வருகிறோம்.

மாலை மலர்

சென்னை நுங்கம்பாக்கத்தில் தி வீக் (THE WEEK) ஆங்கில வார இதழ் நடத்தும் கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழகத்தின் திட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை வரை பாராட்டி உள்ளது.

* தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவான நிலை உள்ளது.

* தமிழகம் நம்பர் ஒன் மாநிலம் என மத்திய பா.ஜ.க. அரசே கூறி உள்ளது.

* டபுள் என்ஜின் என கூறும் டப்பா என்ஜின் மாநிலங்களில் இப்படி ஒரு வளர்ச்சியை காட்ட முடியுமா?

* மத்திய பா.ஜ.க. அரசின் நெருக்கடியை தாண்டி வளர்ந்துள்ளது தமிழ்நாடு.

* எல்லோருக்குமான வளர்ச்சியை நோக்கமாக கொண்டு திட்டங்களை தீட்டி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.