தமிழக செய்திகள்

என்றும் எங்கள் வாத்தியார் MGR- அ.தி.மு.க. புகழாரம்

அ.தி.மு.க. எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கண்டெடுத்த மக்கள் திலகம்எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் அமைத்திட சூளுரைப்போம்!

மாலை மலர்

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்த தினத்தையொட்டி அ.தி.மு.க. தலைமை கழகம் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி,

மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்

என்றும் எங்கள் வாத்தியார் MGR

அவர்களின் பிறந்தநாள்!

தீயசக்தியின் பிடியில் இருந்து மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க,

அ.தி.மு.க. எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கண்டெடுத்த மக்கள் திலகம்,

திரை ஆளுமையாக தத்துவங்களையும்,

முதல்வராக மக்கள் நலத் திட்டங்களையும்

அள்ளித் தந்த பொன்மனச் செம்மல்,

இன்றும், என்றும், நம் இதயதெய்வமாக நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் நம் புரட்சித் தலைவர் அவர்களின் பிறந்தநாளில்,

புரட்சித் தலைவர் அவர்கள் கூறிய மக்களாட்சியை, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் அமைத்திட சூளுரைப்போம்!

வாழ்க புரட்சித்தலைவர் நாமம்!

வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்! என்று கூறப்பட்டுள்ளது.