தமிழக செய்திகள்

எழும்பூர் ரெயில் நிலைய அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

ரெயில் நிலைய அலுவலகத்தில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மாலை மலர்

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள டெலிகாம் அலுவலகத்தின் முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.

அலுவலகத்தில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக, முதற்கட்ட தகவல் வெளியானது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வேப்பேரியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.

பின்னர், தண்ணீரை பீய்த்து அடித்த தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.

மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.