தமிழக செய்திகள்

தலைமை சொன்ன ஒத்த வார்தைக்காக பொறுமையுடன் கடந்து போறேன் - வைகோவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

காங்கிரஸ் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம் என கிண்டல் செய்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ.பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே.

மாலை மலர்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, 'காங்கிரஸ் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம்' என கிண்டல் செய்து இருந்தார்.

இந்நிலையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வைகோவுக்கு பதிலடி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கூட்டணி குறித்து பேசக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்து போறேன்.

பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே என்று தெரிவித்துள்ளார்.