தமிழக செய்திகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை

வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. வரும் 19-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

மாலை மலர்

தமிழ்நாட்டின் அனேக இடங்களில் வரும் 19-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சென்னை மட்டுமில்லாமல் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.