தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY: ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை

காலையில் தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்தது. மாலையில் தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்தது.

மாலை மலர்

சென்னை:

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது.

வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,950-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,600-க்கும் விற்பனையாகிறது.

இந்நிலையில் இன்று 2-வது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி மாலையில் ரூ.880 கூடுதலாக உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.72.480-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரே நாளில் ரூ.1120 உயர்ந்துள்ளது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

01-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360

31-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360

30-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360

29-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,160

28-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,480

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

01-06-2025- ஒரு கிராம் ரூ.111

31-05-2025- ஒரு கிராம் ரூ.111

30-05-2025- ஒரு கிராம் ரூ.111

29-05-2025- ஒரு கிராம் ரூ.111

28-05-2025- ஒரு கிராம் ரூ.111