தமிழக செய்திகள்

ஒரே நாளில் இரு முறை உயர்ந்து 66 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை- மக்கள் அதிர்ச்சி

ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் ரூ.180 உயர்ந்துள்ளது.சென்னையில் ஆபரணதங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 8,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாலை மலர்

சென்னை:

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில், அதன் பின்னர் விலை மளமளவென சரிந்து, மீண்டும் அதே மாதம் 19-ந்தேதி ரூ.64 ஆயிரத்தை தாண்டியது.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் மீண்டும் விலை குறைந்து காணப்பட்டு, கடந்த 4-ந் தேதியில் இருந்து பெருமளவில் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை பயணித்து வருகிறது.

அந்த வரிசையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,230-க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,840-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 112 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் இன்று 2-வது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணதங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 8,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் ரூ.180 உயர்ந்து, சவரனுக்கு ரூ.1440 உயர்ந்துள்ளது. இதனால் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.66,400 விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

13-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,960

12-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520

11-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,160

10-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,400

09-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,320

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

13-03-2025- ஒரு கிராம் ரூ.110

12-03-2025- ஒரு கிராம் ரூ.109

11-03-2025- ஒரு கிராம் ரூ.107

10-03-2025- ஒரு கிராம் ரூ.108

09-03-2025- ஒரு கிராம் ரூ.108