தமிழக செய்திகள்

தி.மு.க.விற்கு தேர்தல் பயம் வந்துவிட்டதால் பொங்கல் பரிசாக ரூ.3000 அறிவிப்பு - இ.பி.எஸ்.

4 ஆண்டுகளாக லேப்டாப் வழங்காமல் தேர்தலுக்காக தற்போது லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.இன்று தமிழகமே போராட்டகளமாக மாறி உள்ளது.

மாலை மலர்

சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது தொடர்பாக அ.திமு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

* மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை வரவேற்கிறோம். காரணம் அது அ.தி.மு.க.வின் திட்டம்.

* 4 ஆண்டுகளாக லேப்டாப் வழங்காமல் தேர்தலுக்காக தற்போது லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.

* கிட்னி முறைகேடு விவகாரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கவில்லை.

* என் மீதான புகாரில் நிரபராதி என நிரூபித்து விட்டு தான் நிற்கிறோம்.

* தேர்தலை நோக்கியே தி.மு.க. அரசு தற்போது பயணப்பட்டு கொண்டிருக்கிறது.

* தி.மு.க.விற்கு தேர்தல் பயம் வந்துவிட்டதால் பொங்கல் பரிசாக ரூ.3000 அறிவித்துள்ளது.

* இன்று தமிழகமே போராட்டகளமாக மாறி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.