தமிழக செய்திகள்

2021 சட்டசபை தேர்தலில் சூழ்ச்சியால் தோல்வி... 2026-ல் 100% வெற்றி உறுதி - எடப்பாடி பழனிசாமி

அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே அ.தி.மு.க.வின் தாரக மந்திரம். தனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் ஏதாவது குறை இருந்ததா?

மாலை மலர்

அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* தீய சக்தி தி.மு.க.வை தமிழகத்தில் இருந்து அடியோடு அகற்றவே எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார்.

* அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே அ.தி.மு.க.வின் தாரக மந்திரம்.

* நாட்டு மக்களைத்தான் ஜெயலலிதா தனது வாரிசாகப் பார்த்தார்.

* பெரும்பான்மையை நிரூபிக்கும் தருணத்தில் முதலமைச்சர் நடந்துகொண்ட விதம் அனைவருக்கும் தெரியும்.

* 2026 சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.

* அ.தி.மு.க. ஆட்சி குறித்து தி.மு.க.வால் விமர்சனம் செய்ய இயலவில்லை.

* தனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் ஏதாவது குறை இருந்ததா?

* அனைத்து தேர்தல்களிலும் களப்பணி ஆற்றியவர்கள் இங்கே இருக்கிறீர்கள்.

* நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 100% வெற்றி உறுதி.

* சூழ்ச்சியால்தான் 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

* 1991 சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

* 2006 தேர்தலில் மைனாரிட்டி அரசை நடத்திக்கொண்டிருந்தது தி.மு.க.

* 2014 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலவில்லை.

* 2021 தேர்தலில் 75 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.

* 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 இடங்களை அ.தி.மு.க. கூட்டணி வென்றெடுத்தது.

* 2011 சட்டசபை தேர்தலில் கலைஞர் இருந்தபோது கூட எதிர்க்கட்சி வரிசையில் தி.மு.க.வுக்கு இடமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.