தமிழக செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் ரூ.4.5 லட்சம் கோடி ஊழல் - விசாரணை கமிஷன் அமைக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தி.மு.க. ஆட்சி மீதான புகார்கள் குறித்து முழு விசாரணை நடத்த வலியுறுத்தினோம்.இளைஞர் நலன் துறையில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது.

மாலை மலர்

சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

* 2021 முதல் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பட்டியலுடன் ஆளுநரை சந்தித்தோம்.

* கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்கள் தொடர்பாக ஆவணங்களுடன் ஆளுநரிடம் முறையிட்டோம்.

* ஊழல் செய்வதை தவித தி.மு.க. தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.

* தி.மு.க. ஆட்சி மீதான புகார்கள் குறித்து முழு விசாரணை நடத்த வலியுறுத்தினோம்.

* துறைவாரியாக எவ்வளவு ஊழல் நடந்தது என்பதையும் ஆளுநரிடம் அளித்துள்ளோம்.

* தி.மு.க. அரசு எல்லா துறையிலும் ஊழல் செய்ததுடன் அதிகளவிலான கடன் சுமையில் தமிழ்நாட்டை தள்ளி உள்ளது.

* டாஸ்மாக் துறையில் ரூ.50000 கோடி ஊழல் நடந்துள்ளது.

* நகர்புற உள்ளாட்சி துறையில் 64,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது.

* இளைஞர் நலன் துறையில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது.

* கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ.4.5 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது.

* ஊழல் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.