தமிழக செய்திகள்

தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு விட்டார் - சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு குறித்து இ.பி.எஸ். பதில்

மன்னிப்பு கோரிய பிறகு அதைப்பற்றி விவாதம் செய்வது பொருத்தமாக இருக்காது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மாலை மலர்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பெண்கள் பற்றி சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையானது.

இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் டெல்லியில் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:-அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் மகளிர் பற்றி சில கருத்துகளை தெரிவித்தது சர்ச்சையாகி இருக்கிறதே?

பதில்:-கூட்டத்தில் பேசும்போது தவறான வார்த்தை வந்திருக்கிறது. அந்த தவறை உணர்ந்து அதற்கு மன்னிப்பு கேட்டு விட்டார்.

கேள்வி : இனி அதுமாதிரி பேசக்கூடாது என்று நீங்கள் ஏதாவது சொல்லி இருக்கீங்களா?

பதில்:- ஒருவர், தான் சொன்ன கருத்து தவறு என்று உணர்ந்த பிறகு, அதற்கு மன்னிப்பு கோரிய பிறகு அதைப்பற்றி விவாதம் செய்வது பொருத்தமாக இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.