தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்கான எனது கனவு என்பது தனிப்பட்ட ஸ்டாலினின் கனவு அல்ல.தமிழகம் அனைத்து துறைகளிலும் ஆல் ரவுண்டராக வளர்ந்துள்ளது.

மாலை மலர்

சென்னை நுங்கம்பாக்கத்தில் தி வீக் (THE WEEK) ஆங்கில வார இதழ் நடத்தும் கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழ்நாட்டுக்கான எனது கனவு என்பது தனிப்பட்ட ஸ்டாலினின் கனவு அல்ல.

* தமிழ்நாட்டிற்கான எனது கனவு என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியதுதான்.

* கடந்த 5 ஆண்டுகளில் எல்லோருக்குமான வளர்ச்சியை சாதித்து காட்டி உள்ளோம்.

* கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் பெரும் பாய்ச்சலை கண்டுள்ளது.

* தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கி உள்ளோம்.

* தி.மு.க. ஆட்சியின் முத்திரை திட்டங்கள் அனைத்தும் மகளிருக்காகவே நடத்தப்படுகிறது.

* தமிழகம் அனைத்து துறைகளிலும் ஆல் ரவுண்டராக வளர்ந்துள்ளது.

* தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.