தமிழக செய்திகள்

பொதுமக்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.

மாலை மலர்

விழுப்புரம்:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். அவருக்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையின் இருபுறமும் காத்திருந்த பொதுமக்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார்.