தமிழக செய்திகள்

மாநிலத்தில் சுயாட்சி.. ஒன்றியத்தில் கூட்டாட்சி..!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வலிமையான - உண்மையான கூட்டாட்சி இந்தியாவைக் கட்டமைப்போம்.மாநில சுயாட்சிக் கருத்தியலின் தேவையை இந்தியா முழுக்கக் கொண்டு சேர்ப்போம்.

மாலை மலர்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களையும் உரிமைகளையும் பெற்றுத்தந்து, வலிமையான - உண்மையான கூட்டாட்சி இந்தியாவைக் கட்டமைப்போம்!

மாநில சுயாட்சிக் கருத்தியலின் தேவையை இந்தியா முழுக்கக் கொண்டு சேர்த்து, எண்ணங்களால் ஒன்றிணைத்து, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வோம்!

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.