தமிழக செய்திகள்

210 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும்- இ.பி.எஸ்

மயிலாப்பூர் தொகுதி கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கியுள்ளது அதிமுக என்பது குறிப்பிடத்தக்கது.

மாலை மலர்

2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.

மயிலாப்பூர் தொகுதி கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கியுள்ளது அதிமுக என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மயிலாப்பூர் தொகுதியில் இபிஎஸ் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில்,பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றுள்ளார்.

பிரச்சாரத்தின்போது அவர் பேசியதாவது:-

210 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்.

கூட்டணி கட்சிகளை அழைத்தோம், பேசினோம், எத்தனை இடங்கள் என அறிவித்தோம், தேர்தல் அறிக்கையும் வெளியிட்டோம்.

தொகுதிகள் இறுதியாகாமல் திமுகவின் நிலைமை தான் பரிதாபமாக உள்ளது.

அதிமுக முதல்கட்ட வேட்பளர் பட்டியலை இன்று வெளியிட்டோம். முழுமையான பட்டியலில் 3 நாட்களில் வெளியிடப்படும்.

சென்னையில் மலைநீர் வடிகால் பணிகளை திமுக அரசால் முழுமையாக முடிக்க முடியவில்லை.

ஸ்டாலின்தான் வந்தாரு, மழைக்காலத்தில் நீச்சலடிக்க விட்டாரு..

நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோதும் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டது.

தமிழ்நாட்டை திராவிட முன்னேற்றக் கழகத்தின் 4 அதிகார மையங்கள் ஆட்டிப் படைக்கிறது.

சாதாரண மக்களின் துன்பங்களை புரிந்துகொண்டு அதிமுக ஆட்சி நடைபெற்றது.

கொடுத்த வாக்குறுதிகளில் 95 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக பச்சை பொய் சொல்கிறது திமுக, கல்விக்கடனை ரத்து செய்து விட்டார்களா?

நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் ரகசியம் தெரியும் என்று சொன்னார்கள்.. செய்தார்களா?

கிராமத்தில் பிறந்து வாழ்ந்தவன் என்பதால் எனக்கு ஏழைகளின் துன்பம் தெரியும், திமுக ஆட்சியாளர்கள் அப்படி அல்ல.

திமுக ஆட்சி என்பது செல்வந்தர்களின் புகலிடமாக உள்ளது, அங்கு ஏழைகளுக்கு இடமில்லை.

அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் கொடுப்பது தான் திமுக. திமுக கூட்டணியில் எவ்வளவோ முயன்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் உடல் உறுப்புகள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் குற்றவாளிகள் சிக்குவர்.

ஆளுங்கட்சி எம்எல்ஏ மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடைபெற்றது.

திமுக அமைச்சர்கள் கூறுவதைப்போல் மு.க.ஸ்டாலின் சூப்பர் முதல்வர் தான். கடன் வாங்குவதில் சூப்பர் முதலமைச்சர்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.