டி.கே.ராஜா வாக்கு சேகரித்தபோது எடுத்த படம். 
செய்திகள்

திருப்பத்தூர் பெரிய ஏரி சுற்றுலா தலமாக்கப்படும் - பா.ம.க. வேட்பாளர் டி.கே.ராஜா வாக்குறுதி

படகு குழாம், பூங்கா அமைத்து திருப்பத்தூர் பெரிய ஏரி சுற்றுலா தலமாக்கப்படும் என பா.ம.க. வேட்பாளர் டி.கே.ராஜா வாக்குறுதி அளித்துள்ளார்.

மாலை மலர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் டி‌.கே.ராஜா, திருப்பத்தூர் நகரில் சக்தி நகர், சிவராஜ் பேட்டை, கோவிலூர் ரோடு, பிள்ளையார் கோவில்தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, தண்டபாணி கோவில் தெரு, நகைக்கடை பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகர செயலாளர் டி.டி.குமார், தலைமையில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது மீண்டும் நான் வெற்றி பெற்றால் திருப்பத்தூர் பெரிய ஏரியில் படகு குழாம் அமைத்து சுற்றுலாத்தலமாக மாற்றப்படும். திருப்பத்தூர் பகுதியில் மருத்துவக்கல்லூரி ஏற்படுத்தி தரப்படும் என்று கூறி மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், தொகுதி செயலாளர் கே.எம். சுப்பிரமணியம், மாவட்ட பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர்.நாகேந்திரன், நகர அவைத்தலைவர் ஜி.ரங்கநாதன், தம்பாகிருஷ்ணன், வீடியோ சரவணன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நகர செயலாளர் எம்.மகேஸ்வரன், எஸ்.எம்.எஸ்.சதீஷ், ஐயர். சம்பத், பா.ஜ.க. நகர தலைவர் டி.சி.அருள்மொழி, மாவட்ட துணைச் செயலாளர் வக்கில் அன்பழகன், பொதுச் செயலாளர் கண்ணன், பா.ம.க. முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. மேகநாதன், நடராஜன், மாவட்ட செயலாளர் ஆர். கிருபாகரன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் விஜயகுமார், நகர தலைவர் முத்தமிழ், நகர செயலாளர் கராத்தே சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.