வானிலை ஆய்வு மையம் 
செய்திகள்

கன்னியாகுமரி, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 27 செ.மீட்டர், பேச்சிப்பாறையில் 22செ.மீ, சித்தாரில்20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

மாலை மலர்

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (17-ந்தேதி) நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், திருப்பூர், திருப்பத்தூர், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (18-ந்தேதி) கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூர், விழுப்புரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 27செ.மீட்டர், பேச்சிப்பாறையில் 22செ.மீ, சித்தாரில்20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு திறப்பு