ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று புல்வாமாவில் உள்ள சி.ஆர்.பி.எப் முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீரில் கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் அதிகளவில் இருந்த காலம் இருந்தது. தற்போது அதுபோன்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
பயங்கரவாதம் மனித குலத்திற்கு எதிரானது. அதை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்... கண்காணிப்பு குழு முடிவு செய்யலாம் என்கிறது உச்ச நீதிமன்றம்