கோப்பு படம். 
புதுச்சேரி

மோட்டார் சைக்கிள் திருட்டு

புதுவை பஸ் நிலையம் அருகே சுப்பையா நகரை சேர்ந்தவர் சக்ரவர்த்திஇவர் லாரி வைத்து டிரான்ஸ்போர்ட்டு தொழில் செய்து வருகிறார்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை பஸ் நிலையம் அருகே சுப்பையா நகரை சேர்ந்தவர் சக்ரவர்த்தி. இவர் லாரி வைத்து டிரான்ஸ்போர்ட்டு தொழில் செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில் பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் சக்ரவர்த்தி அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சக்ரவர்த்தி உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.