செய்திகள்

பியூஷ் கோயலை பேராசிரியர் என அழைத்த சபாநாயகர்: மக்களவையில் ருசிகரம்

பாராளுமன்றத்தின் மக்களவையில், மின்சார துறை மந்திரியை பேராசிரியர் என சபாநாயகர் அழைத்தது, அவையில் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

மாலை மலர்

பாராளுமன்றத்தின் மக்களவை இன்று காலை கூடியது. அவை நடவடிக்கைகளை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தொடங்கி வைத்தார். கேள்வி நேரத்தின் போது, மின்சார துறை தொடர்பாக கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.

அதற்கு மத்திய அரசின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, மின்சார துறை மந்திரி பியூஷ் கோயல் மிகவும் விரிவாக பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

இதை கூர்ந்து கவனித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், “இனி நீங்கள் உங்கள் பெயரை பேராசிரியர் பியூஷ் கோயல் என மாற்றி வைத்துக் கொள்ளலாம்’’ என நகைச்சுவையாக கூறினார்.