இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையை பாகிஸ்தானின் கராச்சி நகருடன் இணைக்கும் விமானச் சேவை வரும் 11-ம் தேதியில் இருந்து நிறுத்தப்படுகிறது என பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான விமானச் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கான வெளிப்படையான காரணம் ஏதும் குறிப்பிடாமல் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 11-ம் தேதிக்கு பிந்தைய பயணத்துக்காக கராச்சி-மும்பை இடையிலான விமானங்களுக்கான முன்பதிவு டிக்கெட் விற்பனை வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப நாட்களாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பூசல்கள் அதிகரித்துவரும் நிலையில், வர்த்தகம் மற்றும் வருவாய் அம்சங்களை முன்வைத்து இந்த திடீர் அறிவிப்பு வெளியாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.