செய்திகள்

உ.பி. அரசு மருத்துவமனையில் பெண் நோயாளியை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர்

உத்தரப்பிரேதச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளியை ஆண் செவிலியர் கற்பழித்த சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

லக்னோ:

உத்தரப்பிரேதச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஜார்க்கண்டைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அப்பெண் நோயாளியை மருத்துவமனை ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடத்திய விசாரணையில், தனி அறையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணை நேற்று இரவு அங்கு செவிலியராக வேலைப்பார்க்கும் புஷ்கர் குமார் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்த உண்மை தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் புஷ்கர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாகியுள்ள புஷ்கரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.