இந்தியா

இரண்டு இந்திய கப்பல்கள் 92,612 டன் LPG-யுடன் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தன

ஈரான் அனுமதி அளித்ததை தொடர்ந்து மேலும் இரண்டு இந்திய கப்பல்கள் 92,612 டன் LPG-யுடன் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து பாதுகாப்பாக இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன

மாலை மலர்

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் காரணமாக கடல் போக்குவரத்துக்கு முக்கிய வழியாக திகழும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இந்த பகுதி வழியாக செல்லும் எதிரிகளின் கப்பல்களை மூழ்கடிப்போம் என ஈரான் சபதம் எடுத்துள்ளது.

இந்திய பிரதமர் மோடி, ஈரான் அதிபரிடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை வழியாக செல்ல ஈரான் அனுமதி அளித்தது. அதனடிப்படையில் ஏற்கனவே நான்கு கப்பல்கள் இந்தியா வந்தடைந்துள்ளன.

இந்த நிலையில் இன்று இரண்டு கப்பல்கள் 92,612 டன் LPG-யுடன் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

பைன் கியாஸ் (Pine Gas), ஜாக் வசந்த் (Jag Vasanth) ஆகிய இரண்டு கப்பல்களும் பாரசீக வளைகுடா பகுதியில் அருகருகே நின்றுள்ளனர். இரண்டு கப்பல்களும் இந்தியா கொடியுடன் ஈரானின் டாரக் மற்றும் குயேஷ்ம் தீவு இடையே நிற்பனை உறுதி செய்த ஈரான், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதி அளித்துள்ளது.

அதனடிப்படையில் இரண்டு கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன. இந்த இரண்டு கப்பல்களுடன் வருகிற 26 மற்றும் 28-ந்தேதி இந்திய துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு கப்பல்களிலும் முறையே 33 மற்றும் 27 இந்தியர்கள் உள்ளனர்.

இந்திய கொடியுடன் இன்னும் 20 கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி ஈரான்- ஓமன் இடையே உள்ளது. வளைகுடா நாடுகளில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றை கடல் வழியாக உலக நாடுகளுக்கு எடுத்துக் செல்லும் முக்கியமான குறுகிய வழி கொண்ட போக்குவரத்து பகுதியாக உள்ளது.