இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமராவதற்கு முன், குஜராத் மாநிலம் முதல்வராக இருந்தார். அதன்பின் 2014-ல் இந்திய பிரதமர் ஆனார். தற்போது வரை பிரதமாக இருந்து வருகிறார்.
இவர் முதல்வர் மற்றும் பிரதமராக இன்றுடன் 8,931 நாட்கள் மக்கள் சேவையாற்றி வருகிறார். இதன்மூலம் இந்திய அரசு வரலாற்றில் தலைமை பதவியில் (முதல்வர் மற்றும் பிரதமர்) அதிக நாட்கள் இருந்து மக்கள் சேவை ஆற்றி வரும் தலைவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
சிக்கிம் முன்னாள் முதல்வர்
இதற்கு முன்னதாக சிக்கிம் மாநில முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங் 8,930 நாட்கள் மக்கள் சேவையாற்றி சாதனைப் படைத்திருந்தார். இதை தற்போது பிரதமர் மோடி முறியடித்துள்ளார்.
இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில் "பிரதமர் நரேந்திர மோடி, தற்போது இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகித்த அரசாங்க தலைவராகத் திகழ்கிறார். நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடி கொண்ட தூய அர்ப்பணிப்பே இதை வரையறுக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா "ஏழைகளுக்கு அவர்களின் உரிமைகளை வழங்குவதாகட்டும், வளர்ச்சியில் புதிய மைல்கற்களை அமைப்பதாகட்டும் அல்லது உலக அரங்குகளில் தேசத்தின் பெருமையை உயர்த்துவதாகட்டும் மோடி சகாப்தம் இந்தியாவை அடையாளம் காண முடியாத அளவிற்கு உருமாற்றியுள்ளது" என பாராட்டியுள்ளார்.
புதிய இந்தியாவை வளர்த்தெடுப்பதற்கு ஒரு வாழ்நாள் முழுவதிற்குமான உழைப்பு தேவைப்பட்டது. பிரதமர் மோடி அந்த உழைப்பை முழுமையாகவே அர்ப்பணித்தார். கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் சேவையாற்றி வருவது, அவரின் அளப்பரிய அர்ப்பணிப்பு உணர்வின் வெளிப்பாடுஅமித் ஷா
மேலும் பல அமைச்சர்கள், தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.