விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் 2001-ம் ஆண்டு ஒரு உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த மெனு கார்டின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் ஓட்டல்களில் தற்போது இருக்கும் உணவு பொருட்களின் விலையை விட 6 முதல் 7 மடங்கு குறைவாக இருப்பதை காணமுடிகிறது. அதாவது அந்த 'மெனு கார்டில்' சிக்கன் பிரியாணி ரூ.30, மட்டன் பிரியாணி ரூ.32, பன்னீர் பட்டர் மசாலா ரூ.24 என்ற அளவிலேயே உள்ளது.
இந்த 'மெனு கார்டு' இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பயனர்கள் பலரும் விலைவாசி பட்டியல் குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், எதுவும் மாறவில்லை. இப்போது எல்லா விலையிலும் ஒரு ஜீரோ சேர்ந்துள்ளது என கிண்டல் செய்துள்ளார். இதேப்போல பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.