இந்தியா

தெருநாய்கள் விவகாரம்: நாளை உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்

தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகத்தில் வைத்து பராமரிக்க உத்தரவு.இரண்டு நீதிபதிகள் உத்தரவிட்ட நிலையில், வழக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.

மாலை மலர்

டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும். இதை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.

இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்ச் கவனித்தும் எடுத்துக் கொள்ளும் எனத் தெரிவித்தது. ஆகஸ்டு 14ஆம் தேதி இது தொடர்பாக மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணை நடத்தி, உத்தரவு பிறப்பிக்காமல் ஒத்திவைத்தது.

இந்த நிலையில் நாளை மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.