இந்தியா

பொங்கல் பண்டிகை சர்வதேச விழாவாக கொண்டாடப்படுவது மட்டற்ற மகிழ்ச்சி - பிரதமர் மோடி

மனித உழைப்பிற்கு இயற்கையின் இசைவிற்கும் இடையிலான நெருக்கத்தை காட்டும் பண்டிகை. உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.

மாலை மலர்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

* மனித உழைப்பிற்கு இயற்கையின் இசைவிற்கும் இடையிலான நெருக்கத்தை காட்டும் பண்டிகை.

* உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.

* வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளத்தை பொங்கல் பண்டிகை திகழ்கிறது.

* இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களாலும் பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.

* பொங்கல் பண்டிகை சர்வதேச விழாவாக கொண்டாடப்படுவது மட்டற்ற மகிழ்ச்சி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.