இந்தியா

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல் செல்கிறார்

இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையே மிகப்பெரிய கூட்டணி உள்ளது. இந்தியா மிகவும் சக்திவாய்ந்தது, மிகவும் பிரபலமானது- நெதன்யாகு.

மாலை மலர்

இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வருகிற 25-ந்தேதி மற்றும் 26-ந்தேதி இஸ்ரேல் செல்கிறார்.

அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "பாராளுமன்ற உரை விரைவில் நடக்க இருக்கிறது. யார் இங்கே வருகிறார்? இந்திய பிரதமர் மோடி" எனத் தெரிவித்தார்.

மேலும், "இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையே மிகப்பெரிய கூட்டணி உள்ளது. அனைத்து வகையான ஒத்துழைப்புகளையும் பற்றி நாம் விவாதிக்கப் போகிறோம். இப்போது, உங்களுக்குத் தெரியும், இந்தியா ஒரு சிறிய நாடு அல்ல. இது 1.4 பில்லியன் மக்களைக் கொண்டுள்ளது. இந்தியா மிகவும் சக்திவாய்ந்தது, மிகவும் பிரபலமானது" என்றார்.