இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் தீவிரவாத கட்டமைப்பை மண்ணுக்கடியில் புதைத்து விட்டோம் - மோடி

விண்வெளித் துறையில் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100% இலக்குகள் நிறைவேற்றப்பட்டன.

மாலை மலர்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இத்தொடர், ஆகஸ்டு 21-ந் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு நடக்கிறது.

இந்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியமான ஒன்று.

* ஆக்சியம் 4 திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு சென்று திரும்பிய சுபான்ஷு சுக்லாவுக்கு பாராட்டு.

* விண்வெளித் துறையில் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது.

* ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் ராணுவ பலத்தை உலக நாடுகள் கண்டு வியந்தன.

* பாகிஸ்தானின் தீவிரவாத கட்டமைப்பை மண்ணுக்கடியில் புதைத்து விட்டோம்.

* பயங்கரவாதிகளின் இருப்பிடங்களுக்கே சென்று அவர்களை தீரத்துடன் அழித்துள்ளோம்.

* ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100% இலக்குகள் நிறைவேற்றப்பட்டன.

* இந்திய ராணுவத்தின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் அமைந்தது.

* பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் புதிய தொடக்கங்களுக்கான கூட்டத்தொடர்.

இவ்வாறு அவர் கூறினார்.

#WATCH | Delhi: PM Modi says, "This monsoon session is a celebration of victory. The whole world has seen the strength of India's military power. The target set by the Indian Army in Operation Sindoor was achieved 100%. Under Operation Sindoor, the houses of the masters of… pic.twitter.com/aKgcMe6KXM