இந்தியா

அமெரிக்கா மற்றும் சீனா உடனான போட்டி இப்போதுதான் தொடங்கியுள்ளது: சந்திரபாபு நாயுடு

சீனாவின் பொருளாதாரம் இந்தியாவை விட நான்கரை மடங்கு அதிகம்.அமெரிக்காவின் பொருளாதாரம் 7 மடங்கு அதிகம்.

மாலை மலர்

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-

இன்று நாம் உலகின் 4ஆவது பொருளாதார நாடாக முன்னேறியுள்ளோம். இன்னும் இரண்டு வருடங்களில் 3ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறுவோம். 3ஆவது இடம் வரை நமக்கு போட்டி கிடையாது. உண்மையான போட்டி தற்போதுதான் தொடங்கியுள்ளது.

சீனாவின் பொருளாதாரம் இந்திய பொருளாதாரத்தைவிட நான்கரை மடங்கு அதிகமாகும். அமெரிக்காவின் பொருளாதாரம் 7 மடங்கு அதிகமாகும். நாம் தயாராக வேண்டும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.