பிரதமர் மோடி 
இந்தியா

எரிபொருள் தட்டுப்பாடு: அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் இன்று ஆலோசனை

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களின் முதல் மந்திரிகள் பங்கேற்க மாட்டார்கள்.

மாலை மலர்

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆலோசிக்க, பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் சூழலால் இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தித் தேவைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு, கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் குறித்து மாநில அரசுகளின் தயார் நிலையை பிரதமர் கேட்டறிகிறார்.

'டீம் இந்தியா' என்ற அடிப்படையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்வதே இந்தக் கூட்டத்தின் முக்கிய இலக்காகும்.

இதில் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் முதல் மந்திரிகள் பங்கேற்க மாட்டார்கள்.

இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டமும், பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்ட ஆலோசனையும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.