2025-26 நிதியாண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால் தொடக்க நாளில் பாராளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரு அவை உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
இதைத் தொடா்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறாா். 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற இருக்கிறார்.
இந்நிலையில் குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பங்கஜ் சவுத்ரி ஆகியோர் சந்தித்தனர்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பு மரியாதை நிமித்தமாக குடியரசு தலைவரை சந்தித்து விவரங்களை எடுத்துரைத்தார்.
குடியரசு தலைவருடனான சந்திப்புக்குப்பின் பாராளுமன்றம் செல்லும் நிதியமைச்சர் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பார்.
பிரதமர் தலைமையில் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட உடன் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
#WATCH | Delhi | Union Finance Minister Nirmala Sitharaman and MoS Finance Pankaj Chaudhary meet President Droupadi Murmu at the Rashtrapati Bhavan Union Finance Minister Nirmala Sitharaman will present #UnionBudget2025, today at Lok Sabha pic.twitter.com/D8PYCoGf4K