இந்தியா

இரண்டு நாள் பயணமாக நாளை ஜம்மு செல்கிறார் அமித் ஷா

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியில் இருந்து 3ஆவது முறையாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் செல்கிறார்.பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார்.

மாலை மலர்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை இரண்டு நாள் பயணமாக ஜம்மு செல்கிறார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு நிலை குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்ட பிறகு முதன்முறையாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் செல்கிறார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான், எல்லையில் உள்ள மக்கள் வசிக்கும் இந்திய எல்லைப் பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அத்துடன் டிரோன் தாக்குதல் நடத்தியது. மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடத்தப்பட்ட தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். பூஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பூஞ்ச் மாநிலத்திற்கு அமித் ஷா செல்கிறார்.

கடந்த ஏப்ரல் 10ஆம் தேதியில் இருந்து 3ஆவது முறயைாக அமித் ஷா செல்ல இருக்கிறார். ஏப்ரல் 6ஆம் தேதி 3 நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்றிருந்தார். அதன்பின் பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 23ஆம் தேதி சென்றிருந்தார். அதன்பின் தற்போது செல்கிறார்.

துணை நிலை ஆளுநர், ராணுவத்தின் மூத்த அதிகாரிகள், துணை ராணுவப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற இருக்கும் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பூஞ்ச் மாவட்டம் செல்லும்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திப்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.