இந்தியா

21ஆம் நூற்றாண்டு வடகிழக்கு பகுதிகளுக்கு சொந்தமானது: இம்பாலில் பிரதமர் மோடி பேச்சு

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில், மணிப்பூரின் வீர மகன்கள் முக்கிய பங்கு வகித்தனர்.மணிப்பூரை அமைதி, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

மாலை மலர்

பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றுள்ளார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

* 21 ஆம் நூற்றாண்டு வடகிழக்குக்கு சொந்தமானது.

* வாய்ப்புகளின் நகரம் இம்பால். இந்தியாவின் வளர்ச்சியின் வேகத்தை துரிதப்படுத்தும் இடங்களில் ஒன்றாக இதைப் பார்க்கிறேன்

* மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் மணிப்பூர் பெண்கள் முன்னணியில் உள்ளனர்

* மணிப்பூரில் எந்த வகையான வன்முறையும் துரதிர்ஷ்டவசமானது

* மணிப்பூரை அமைதி, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்

* ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில், மணிப்பூரின் வீர மகன்கள் முக்கிய பங்கு வகித்தனர்

* நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றதற்கு சுஷிலா கார்கிக்கு வாழ்த்துகள். இது பெண்கள் அதிகாரமளிப்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

* மணிப்பூரில் வெள்ளப் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அசு பல திட்டங்களில் செயல்படுகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.