போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீசார் தீவிர வாகன சோதனை

சமூக விரோத செயல்களை தடுக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கு பாதிப்பை தடுக்கவும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாகன சோதனையின் போது காரில் வந்தவர்கள் முறையாக சீட் பெல்ட் அணிந்து வரவேண்டும்

மாலை மலர்

பரமத்தி வேலூர்

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படு கிறது. இதை முன்னிட்டு பரமத்திவேலூரில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் பரமத்தி வேலூர் டி.எஸ்.பி. கலையரசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் சமூக விரோத செயல்களை தடுக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கு பாதிப்பை தடுக்கவும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.வாகன சோதனையின் போது காரில் வந்தவர்கள் முறையாக சீட் பெல்ட் அணிந்து வருகின்றனரா எனவும், இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் தலைகவசம் அணிந்து வரு கின்றனரா, முறையாக ஓட்டுனர் உரிமம் உள்ளதா எனவும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் விதிமுறைகளை மீறி செல்போன் பேசிக்கொண்டும்,ஒரே வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தவர்களை நிறுத்தி முகவரி, முறையான ஆவணங்கள் உள்ளனவா எனவும் சோதனை மேற்கொண்டனர், காரில் முழுமையாக சோதனை செய்து முறை யான ஆவணங்கள் இன்றி வந்தவர்களுக்கு ரூ.100 முதல் 1000- ம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் இந்த வாகன தணிக்கை தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு நடைபெறும் என்றும் டி.எஸ்.பி. கலையரசன் தெரிவித்தார்.