செய்திகள்

நடுரோட்டில் நடனம் ஆடிய மாநகராட்சி அதிகாரிகள் - வைரலாகும் வீடியோ

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் சாலையை மறித்து நடனமாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

மாலை மலர்

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கயாத்நகரின் மாநகராட்சி அதிகாரி எஸ். திருமலா ரெட்டி தன்னுடன் பணிபுரியும் அதிகாரிகளுடன் இணைந்து சொகுசு காரில் சென்றுள்ளார். ஸ்ரீசைலாம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அனைவரும் காரை விட்டு இறங்கி நடுரோட்டில் நடனம் ஆடினர்.

இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வாகனங்கள் அதிகம் செல்லும் நெடுஞ்சாலையை மறித்து அரசு அதிகாரிகள் மக்களுக்கு சொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews