தர்பூசணி பழங்கள். 
செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி- தர்பூசணி பழங்கள் தேக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் கொரோனா வைரஸ் எதிரொலியாக தர்பூசணி பழம் தேக்கம் அடைத்துள்ளது.

மாலை மலர்

போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் கொரோனா வைரஸ் எதிரொலியாக தர்பூசணி பழம் தேக்கம் அடைத்துள்ளது. கொரோனா வைரசின் ஆரம்ப அறிகுறி சளி என்பதாலும், சளி பிடித்தவர்களுக்கு உடனடியாக நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதாலும் பொதுமக்கள் இதனை தவிர்த்து வருகின்றனர். 

மேலும் சளி பிடிக்கும் பல்வேறு பழங்களை பொதுமக்கள் தவிர்த்து வருகிறார்கள். எனவே, தர்பூசணி பழம் சளி பிடிக்கும் என கருதி பொதுமக்கள் இதனை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவது இல்லை. போச்சம்பள்ளி வாரச் சந்தையில் கடந்த ஆண்டுகளில் தர்பூசணி கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்டுவந்த நிலையில், இந்த ஆண்டு கிலோ ரூ.10-க்கு விற்கப்படுகிறது. 

இதனை வாங்க யாரும் முன்வராததால் லாரிகளில் கொண்டுவந்த தர்பூசணி பழம் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்து வருகின்றன. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.