வணிகம்

GOLD PRICE TODAY : ரூ.90 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை

தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மாலை மலர்

அமெரிக்க அதிபர் டிரம்பின் அடாவடி முடிவுகளால் உலக நாடுகள் வர்த்தகப் போரை சந்தித்து வருகின்றன. இதனால், பெரும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் ரூ.89 ஆயிரத்துக்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் நேற்று ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்து 125-ல் இருந்து ரூ.75 உயர்ந்து கிராம் ரூ.11 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ.90 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.167-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

07-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,600

06-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,000

05-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

04-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

03-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,200

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

07-10-2025- ஒரு கிராம் ரூ.167

06-10-2025- ஒரு கிராம் ரூ.167

05-10-2025- ஒரு கிராம் ரூ.165

04-10-2025- ஒரு கிராம் ரூ.165

03-10-2025- ஒரு கிராம் ரூ.162