வணிகம்

GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை

நேற்று தங்கம் விலை ஒரு கிராம் 9,060 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72,480 ரூபாய்க்கும் விற்பனையானது.வெள்ளி விலை இன்று மாற்றமில்லை.

மாலை மலர்

சென்னை:

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும்.

கடந்த வாரத்தின் தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை பின்னர் தொடர்ந்து வந்த நாட்களில் உயர்ந்தே காணப்பட்டது. நேற்று தங்கம் விலை ஒரு கிராம் 9,060 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72,480 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வாரத்தின் தொடங்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9,010 ரூபாய்க்கும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,080 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

06-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480

05-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480

04-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,400

03-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,840

02-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,520

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

06-07-2025- ஒரு கிராம் ரூ.120

05-07-2025- ஒரு கிராம் ரூ.120

04-07-2025- ஒரு கிராம் ரூ.120

03-07-2025- ஒரு கிராம் ரூ.121

02-07-2025- ஒரு கிராம் ரூ.120