வணிகம்

GOLD PRICE TODAY : தொடர்ந்து உயரும் தங்கம் விலை... இன்றைய நிலவரம்

நேற்று தங்கம் விலை ஒரு கிராம் 9,110 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72,880 ரூபாய்க்கும் விற்பனையானது.வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே இருக்கிறது.

கடந்த 3 நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்பட்டது. நேற்று தங்கம் விலை ஒரு கிராம் 9,110 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72,880 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,170 ரூபாய்க்கும் சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73,360 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

18-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,880

17-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,840

16-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800

15-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,160

14-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

18-07-2025- ஒரு கிராம் ரூ.125

17-07-2025- ஒரு கிராம் ரூ.124

16-07-2025- ஒரு கிராம் ரூ.124

15-07-2025- ஒரு கிராம் ரூ.125

14-07-2025- ஒரு கிராம் ரூ.127