வணிகம்

GOLD PRICE TODAY : சற்றே குறைந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்...

நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.73,360-க்கும் விற்பனையானது.வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை விலை மாற்றமின்றியும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்தும், புதன்கிழமை சவரனுக்கு ரூ.480 உயர்ந்தும், நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.73,360-க்கும் விற்பனையானது

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,150-க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,200-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 123 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

31-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360

30-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680

29-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,200

28-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

27-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

31-07-2025- ஒரு கிராம் ரூ.125

30-07-2025- ஒரு கிராம் ரூ.127

29-07-2025- ஒரு கிராம் ரூ.126

28-07-2025- ஒரு கிராம் ரூ.126

27-07-2025- ஒரு கிராம் ரூ.126