வணிகம்

தொடர்ந்து உயரும் தங்கம் விலை: சவரன் ரூ.60 ஆயிரத்தை நெருங்குகிறது- இன்றைய நிலவரம்

நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,120-க்கும் விற்பனையானது.தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.800 வரை உயர்ந்தது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,720-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ. 58,640-க்கும், புதன்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,720-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,120-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,600-க்கும் கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,450-க்கும் விற்பனையாகிறது.

மொத்தத்தில் தங்கம் விலை நான்கு நாட்களில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

16-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,120

15-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,720

14-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,640

13-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,720

12-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,520

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

16-01-2025- ஒரு கிராம் ரூ. 103

15-01-2025- ஒரு கிராம் ரூ. 101

14-01-2025- ஒரு கிராம் ரூ. 100

13-01-2025- ஒரு கிராம் ரூ. 102

12-01-2025- ஒரு கிராம் ரூ. 101