வணிகம்

வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. பார் வெள்ளி ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாலை மலர்

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.800 வரை உயர்ந்தது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 58,720-க்கும் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,340-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 102 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

12-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,520

11-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,520

10-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280

09-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,080

08-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,800

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

12-01-2025- ஒரு கிராம் ரூ. 101

11-01-2025- ஒரு கிராம் ரூ. 101

10-01-2025- ஒரு கிராம் ரூ. 101

09-01-2025- ஒரு கிராம் ரூ. 100

08-01-2025- ஒரு கிராம் ரூ. 100