வணிகம்

GOLD PRICE TODAY : ஜெட் வேகத்தில் ஏறும் தங்கம் விலை... அதிர்ச்சியில் மக்கள்

இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் உயர்ந்து உள்ளது.

மாலை மலர்

சென்னை:

சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். 

இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 11,060 ரூபாய்க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 88,480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் உயர்ந்து உள்ளது. கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.166-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

05-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

04-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

03-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,200

02-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

01-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.87,600

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

05-10-2025- ஒரு கிராம் ரூ.165

04-10-2025- ஒரு கிராம் ரூ.165

03-10-2025- ஒரு கிராம் ரூ.162

02-10-2025- ஒரு கிராம் ரூ.164

01-10-2025- ஒரு கிராம் ரூ.161