வணிகம்

GOLD PRICE TODAY : சற்று குறைந்த தங்கம் விலை... அதிரடியாக உயர்ந்த வெள்ளி... இன்றைய நிலவரம்

மாத தொடக்க நாளான நேற்று ஒரு சவரன் ரூ.87,600-க்கு விற்பனையானது. இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

மாத இறுதி நாளான நேற்றுமுன்தினம் தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,880-க்கும் கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,860-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் தொடக்க நாளான நேற்று காலை, மாலை என இருவேளையிலும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,950-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,600-க்கும் விற்பனையானது.

இதனை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 10,880 ரூபாய்க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 87,040 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

நேற்று மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 163 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி பார் வெள்ளி ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

01-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.87,600

30-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,880

29-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,160

28-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120

27-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

01-10-2025- ஒரு கிராம் ரூ.161

30-09-2025- ஒரு கிராம் ரூ.161

29-09-2025- ஒரு கிராம் ரூ.160

28-09-2025- ஒரு கிராம் ரூ.159

27-09-2025- ஒரு கிராம் ரூ.159