விபத்து நடந்த பகுதியில் திரண்டிருந்த மக்கள் 
செய்திகள்

பீகாரில் சொகுசு கார்-டிராக்டர் மோதல்: 11 பேர் பலி

பீகாரில் சொகுசு காரும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகினர்.

மாலை மலர்

முசாபர்நகர்:

பீகார் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு காரும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் கார் முழுவதும் சிதைந்தது. அதில் பயணித்தவர்கள், இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்து துடித்தனர். கான்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. 

தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.